• LinkedIn
  • Join Us on Google Plus!
  • Subcribe to Our RSS Feed

Thursday 6 August 2015

02:20 // by Unknown // No comments

http://www.dinamani.com/tamilnadu/2015/08/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/article2959448.ece

ராகிங்கை தடுக்க யோகா பயிற்சி

மாணவர்களுக்கு யோகா, தியானப் பயிற்சிகள் அளிப்பதன் மூலம் ராகிங்கை தடுக்க முடியும் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா யோசனை தெரிவித்தார்.
மாணவர்களுக்கு யோகா, தியானப் பயிற்சிகள் அளிப்பதன் மூலம் ராகிங்கை தடுக்க முடியும் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா யோசனை தெரிவித்தார்.
 உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுப்பதற்கான மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவின் 6-ஆவது கூட்டம் ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற குழுவின் தலைவரான ஆளுநர் ரோசய்யா பேசியது: உயர் கல்வி நிறுவனங்களில் சில மாணவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை எந்த எல்லை வரை பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட வேண்டும். மேலும், ராகிங்கில் ஈடுபடுவதால் சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வையும் மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
 இளைய சமூகத்தினர் யோகா, தியானங்களில் ஈடுபடுவது மிக முக்கியம். இந்தப் பயிற்சிகள் ராகிங்கை தடுக்க பேருதவியாக இருக்கும்.
 கல்வி நிறுவன வளாகங்களில் ராகிங் தடுப்பு அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படுவது மிக அவசியமாகும்.
 அதே நேரம் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மட்டுமின்றி சுயநிதிக் கல்லூரிகளிலும் ராகிங்கை தடுப்பதற்காக மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உளவியல் நிபுணர்கள் அடங்கிய 3 பேர் குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது.
 இதுபோல, அனைத்துத் தரப்பிலிருந்தும் ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தமிழகத்தில் ராகிங்கை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்றார் அவர்.
 இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு தலைமைச் செயலர் கே. ஞானதேசிகன், டிஜிபி அசோக்குமார், உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


 

0 comments:

Post a Comment